அஸ்ஸாம்:அஸ்ஸாம் மாநிலம், கோக்ரஜார் மாவட்ட காவல்துறை அலுவலர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது பேசிய அவர்கள், "கோக்ரஜார் மாவட்டத்தில் இந்திய-பூடான் எல்லையில் உள்ள உல்தபானி (Ultapani) வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டதாகவும், குறிப்பாக இரண்டு இடங்களில் தனித்தனியாக சோதனை நடத்தியதாகவும் தெரிவித்தனர்.
இந்த சோதனையில், ஏராளமான ஆயுதங்கள் பிளாஸ்டிக் பைகளில் போடப்பட்டு, பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். நான்கு AK47 துப்பாக்கிகள், M16 துப்பாக்கிகள், ஒரு ஸ்னைப்பர் துப்பாக்கி, ஒரு சீன துப்பாக்கி, 5 மேகசின்கள் (magazine) மற்றும் 130 குண்டுகள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.