தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

295 உயிர்களை பலி வாங்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் என்ன? - ரயில்வே அமைச்சர் விளக்கம்! - கோரமண்டல் எக்ஸ்பிரஸ்

295 பேரின் உயிரிழப்புக்கு காரணமான ஒடிசா மாநிலம் பாலாசோர் ரயில் விபத்திற்கு, சிக்னல் சுற்று மாற்றத்தில் ஏற்பட்ட குளறுபடியே காரணம் என, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

சிக்னல் சுற்று மாற்றத்தில் ஏற்பட்ட குளறுபடியே ஒடிசா ரயில் விபத்திற்கு காரணம்  - ரயில்வே அமைச்சர் விளக்கம்!
சிக்னல் சுற்று மாற்றத்தில் ஏற்பட்ட குளறுபடியே ஒடிசா ரயில் விபத்திற்கு காரணம் - ரயில்வே அமைச்சர் விளக்கம்!

By

Published : Jul 22, 2023, 7:00 AM IST

டெல்லி: கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி, ஒடிசா மாநிலம் பாலாசோரில் கோரமண்டல் மற்றும் சாலிமர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் 295க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு, 'சிக்னலிங்-சர்க்யூட்-மாற்றம்' நிகழ்வின் போது, தவறான சிக்னல்கள் அளிக்கப்பட்டதே காரணம் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 295 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான பாலசோர் ரயில் விபத்து குறித்து, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தனது விசாரணையை முடித்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலாசோர் ரயில் விபத்து குறித்து, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மாநிலங்களவையில் தெரிவித்துள்ளதாவது, "கடந்த காலங்களில் வடக்கு சிக்னல் கூம்டியில் (நிலையத்தின்) சிக்னலிங்-சர்க்யூட்-மாற்றத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் லெவல் கிராசிங் கேட் எண். 94க்கு எலக்ட்ரிக் லிஃப்டிங் தடையை மாற்றுவது தொடர்பான சிக்னலிங் பணியின் போது பின்பக்க மோதல் ஏற்பட்டது.

இந்த குறைபாடுகள் ரயில் எண்.12841-க்கு தவறான சிக்னல் அளித்தது, இதில் UP ஹோம் சிக்னல், நிலையத்தின் UP மெயின் லைனில் ரன்-த்ரூ இயக்கத்திற்கான சிக்னலை வழங்கியது. ஆனால் UP மெயின் லைனை UP லூப் லைனுடன் (கிராஸ்ஓவர் 17A/B) இணைக்கும் கிராஸ்ஓவர் UP லூப் லைனில் அமைக்கப்பட்டது. தவறான சிக்னல் விளைவாக ரயில் எண்.12841 UP லூப் லைனில் பயணித்தது, இறுதியில் அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் (எண். N/DDIP) பின்புறம் மோதியது,” அமைச்சர் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த ரயில் விபத்து தொடர்பாக, மாநிலங்களவையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி ஜான் பிரிட்டாஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி (AAP) எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு, அமைச்சர் அஸ்வினி, இந்த பதிலை அளித்து உள்ளார்.

இந்த விபத்தில், 295 பயணிகள் உயிரிழந்ததாகவும், 176 பேர் படுகாயமடைந்ததாகவும், 451 பேர் சிறிய அளவிலான காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும், 180 பேர் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். “இந்த விபத்தில் இறந்த 41 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை,” என்று அமைச்சர் அஸ்வினி குறிப்பிட்டுள்ளார்.

"கடந்த 2018 முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகள் காலகட்டத்தில், 201 ரயில் விபத்து தொடர்பான வழக்குகள், துறை ரீதியான விசாரணைக் குழுவால் விசாரிக்கப்பட்டு உள்ளன. 18 வழக்குகள் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு உள்ளன" என்றும் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து, விபத்து மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதே விசாரணையின் நோக்கம் என, மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

"வெவ்வேறு விபத்து விசாரணைக் குழுக்கள், தங்கள் அறிக்கையில் பரிந்துரைத்த பரிந்துரைகளின்படி, ரயில்வே நிர்வாகத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது" எனவும் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மகர ராசிக்கு எச்சரிக்கை.. உங்க ராசிக்கான இன்றைய பலன் என்ன?

ABOUT THE AUTHOR

...view details