தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேதார்நாத் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் மாயம் - மோசமான வானிலையால் மீட்புப் பணிகள் பாதிப்பு! - தொடர்மழை

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் பகுதியில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக, ஆகஸ்ட் 3ஆம் தேதி இரவு நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாக, அங்கிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேதார்நாத் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் மாயம் - மோசமான வானிலையால் மீட்புப் பணிகள் பாதிப்பு!
கேதார்நாத் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் மாயம் - மோசமான வானிலையால் மீட்புப் பணிகள் பாதிப்பு!

By

Published : Aug 4, 2023, 10:41 AM IST

கேதார்நாத்: உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் தாம் பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி, 13 பேர் மாயமாகி உள்ளனர். கவுரிகுண்ட், சோன்பிரயாக் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக, இந்த நிலச்சரிவு விபத்து நிகழ்ந்து உள்ளது. சம்பவ இடத்திற்கு உத்தரகாண்ட் மாநில பேரிடர் மீட்பு படை விரைந்து உள்ள நிலையில், தொடர் மழை மற்றும் மோசமான வானிலையின் காரணமாக, மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.

கவுரிகுண்ட் பகுதியில், நேபாள மக்கள் கடைகளை நடத்தி வந்தனர். அவர்கள், தங்கள் பணிகளை முடித்த பிறகு, கடைகளின் உள்ளேயே, உறங்கி வருவது வழக்கம். அதுபோல, ஆகஸ்ட் 3ஆம் தேதியும், அவர்கள் இரவில் வழக்கம்போல உறங்கிக் கொண்டு இருந்தனர். அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. அப்போது, கேதார்நாத் தாம் மற்றும் கவுரிகுண்ட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், அவர்களது கடைகள் நிலச்சரிவில் சிக்கி மலைப்பகுதிகளில் இருந்து இடிந்து விழுந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில், 13 பேர் மாயம் ஆகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த பகுதியில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக, மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. நிலச்சரிவு இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் மட்டுமல்லாது, அங்கு பாயும் மந்தாகினி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அதில் அடித்து செல்லப்பட்டவர்களையும் பணியும், மீட்புப் படையினருக்கு கடும் சவாலாக அமைந்து உள்ளது.

மோசமான வானிலையின் காரணமாக, மீட்புப் பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருவதன் காரணமாக, இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக, இந்த சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இரவு முழுவதும் மந்தாகினி ஆற்றின் கரைப்பகுதிகள் மற்றும் இடிபாடு பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் மேற்கொண்ட மீட்புப் பணிகளில், ஒருவரது சடலமும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மீட்புப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, மாநில பேரிடர் மீட்புக் குழுவிற்கு, உத்தரகாண்ட் மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.

கவுரிகுண்ட், கேதார்நாத் தாம் பகுதியின் பரபரப்பான மையமாக விளங்கி வந்த நிலையில், அங்கு பெய்த தொடர் மழையின் காரணமாக, நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. நிலச்சரிவின் தாக்கம் கடுமையாக இருந்ததன் காரணமாக, அங்கிருந்த 2 கடைகள், முற்றிலும் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. அதில் இருந்த 13 பேரின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை. இரவு நேரத்தில் நிலச்சரிவு நிகழ்ந்து உள்ளதால், கடைகளில் மேலும் பலர் இருந்து உள்ளதால், மேலும் பலர், இதில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுவதால், அப்பகுதியில் பெரும்பரபரப்பு நிலவி வருகிறது.

இதையும் படிங்க: தெலங்கானாவில் பப்ஜி விளையாடுவதை பெற்றோர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details