ஹைதராபாத்:உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே கொள்கை மற்றும் பதவிமூப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப தனக்கு அடுத்து, இந்தியாவின் 48ஆவது தலைமை நீதிபதியாக என்.வி ரமணாவை முன்மொழிந்துள்ளார். நீதிபதி என்.வி. ரமணாவின் சில முக்கிய தீர்ப்புகளைப் பார்ப்போம்.
எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விரைவாக தீர்ப்பது
எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது நிலுவையில் உள்ள அனைத்து கிரிமினல் வழக்குகளையும் அனைத்து உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் பட்டியலிட வேண்டும் என்று நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு 2019 செப்டம்பர் 17 அன்று ஒரு உத்தரவை வெளியிட்டது. நீதிமன்ற உத்தரவுகளின்படி இதுவரை பட்டியலிடப்படாத இதுபோன்ற அனைத்து வழக்குகளையும் பட்டியலிட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
பெண்களின் வீட்டு வேலைகளுக்கு மதிப்பு
2021 ஜனவரியில், நீதிபதி என்.வி.ரமணா மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, பெண்கள் வீட்டின் செய்யும் வீட்டு வேலைகள் அவரது கணவரின் அலுவலக வேலைகளை விட குறைவானது அல்ல என்று தீர்ப்பளித்திருந்தது. 2001 லதா வாத்வா வழக்கில் உயர் நீதிமன்றத்தால் தொடங்கப்பட்ட யோசனையை வலியுறுத்திய நீதிபதி என்.வி.ரமணா, இல்லத்தரசிகள் அவர்கள் வீட்டில் செய்த சேவைகளின் அடிப்படையில் பணம் அளிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
பாதுகாப்பு துறையில் பெண்களுக்கு நிரந்தர ஆணையம் வழங்குவது
2018ஆம் ஆண்டில், நீதிபதி என்.வி. ரமணா, பெண் அலுவலர்களுக்கு பாதுகாப்பு துறைகளில் நிரந்தர ஆணையம் வழங்கப்படாதது குறித்து மத்திய அரசை குறைகூறினார். இது தொடர்பாக ஒரு பாரபட்சமான அணுகுமுறையை பின்பற்ற வேண்டாம் என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டதுடன், குறுகியகால சேவை ஆணையம் (SSC) குறித்து மத்திய அரசிடமிருந்து பதிலைக் கோரியது.
முகமது அன்வர் எதிர் டெல்லியின் என்.சி.டி மாநிலம், 2020
நீதிபதி என்.வி.ரமணா, எஸ்.ஏ. நசீர் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, இபிகோ பிரிவு 84இன் படி மனநோயைக் காரணம் காட்டி விதிவிலக்கு கோருவதற்கு, குற்றஞ்சாட்டப்பட்டவர் அவர் / அவள் உண்மையில் வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிருபிக்க வேண்டும் என்று கூறியது.
370 பிரிவு குறித்து பெரிய அமர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது
நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்சய் கிஷன் கவுல், ஆர் சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் மற்றும் சூர்ய காந்த் ஆகியோரின் முன்னிலையில் வந்த டாக்டர் ஷா ஃபேசல் & ஆர்ஸ் எதிர் இந்திய அரசு தொடர்பான வழக்கில் அரசியலமைப்பின் 370ஆவது பிரிவின் கீழ் ஜம்மு கஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது குறித்து குடியரசு மற்றவர்கள் உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யும் மனுக்களை பெரிய அமர்விற்கு அனுப்ப வேண்டிய அவசியத்தை மறுத்தது.
2012 டெல்லி கூட்டு வன்புணர்வு குற்றவாளியின் கருணை மனுவை தள்ளுபடி செய்து மரண தண்டனை நிறைவேற்றுவதை உறுதி செய்தது.
பவன் குமார் குப்தா எதிர் டெல்லி அரசு 2012 டெல்லி கூட்டு வன்புணர்வு வழக்கை விசாரித்த, நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ரோஹிண்டன் ஃபாலி நரிமன், ஆர் பானுமதி, அசோக் பூஷண், மற்றும் ஏ.எஸ் போபண்ணா ஆகியோர் குற்றவாளிகளின் தூக்கிலிட தடை கோரும் மனுவையும் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததற்கு எதிரான இறுதி மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மார்ச் 20 அன்று அதிகாலை 5:30 மணியளவில் நான்கு குற்றவாளிகளும் திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.
காஷ்மீர் ஊரடங்கு: இணையத்தடை காலவரையறையின்றி இருக்க கூடாது, மதிப்பாய்வுகள் மேற்கொள்ள வேண்டும்
அனுராதா பேசின் எதிர் இந்திய அரசு தொடர்பான வழக்கை விசாரித்த என்.வி.ரமணா, சூர்யா காந்த் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அரசியலமைப்பின் 19(1)(ஜி) பிரிவு கீழ் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரதிற்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதாகக் கூறினர். இது தொடர்பாக, இணையத்தை நிறுத்த முடியாது, அவ்வப்போது மதிப்பாய்வு செய்ய வேண்டும். நியாயமான கருத்து அல்லது குறைகளை வெளிப்படுத்துவதை அடக்குவதற்காக அல்லது ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தும்போது குற்றவியல் சட்டம் 144ஆவது பிரிவின் கீழ் தடை விதிக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியது.