தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் லாம்டா கரோனா பரவல்? - நிபுணர் விளக்கம்

இந்தியாவில் இதுவரை லாம்டா வகை கரோனா பரவல் எதுவும் பதிவாகவில்லை என மருத்துவர் பிரக்யா யாதவ் தெரிவித்துள்ளார்.

லாம்டா கரோனா
லாம்டா கரோனா

By

Published : Jul 7, 2021, 7:21 PM IST

கோவிட்-19 தொற்று பல்வேறு வகைகளில் உருமாற்றம் கொண்டு தற்போது பரவிவருகிறது. டெல்டா வகை வைரஸ் மிக வீரியமிக்கதாக தற்போது பரவிவரும் நிலையில், லாம்டா என்ற புதிய வகை பரவத் தொடங்கியுள்ளது.

பெரு நாட்டில் இந்த லாம்டா வைரஸ் முதலில் கண்டறியப்பட்டதாகவும், கடந்த ஒரு மாதத்தில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இது பரவியுள்ளதாகவும் பிரிட்டன் நாட்டின் சுகாதராத் துறை கூறியுள்ளது.

இந்த லாம்டா தொற்று டெல்டாவைவிட வீரியம் மிக்கது எனவும், உலகிலேயே உயிரிழப்பு விகிதம் அதிகம் கொண்ட நாடாக பெரு திகழ்வதாகவும் பிரிட்டன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த லாம்டா வகை தொற்று இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை என தேசிய வைராலஜி அமைப்பின் தலைவர் பிரக்யா யாதவ் தெரிவித்துள்ளார். நிலைமையை உன்னிப்பாக கண்காணித்துவருவதால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:ரவிசங்கர், ஹர்ஷ்வர்தன் உள்ளிட்ட 12 அமைச்சர்கள் ராஜினாமா

ABOUT THE AUTHOR

...view details