தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லாலு யாதவின் சிறுநீரகம் மிக மோசமான நிலையில் உள்ளது: மருத்துவர் தகவல் - Rajendra Institute of Medical Sciences Lalu yadav

லாலுவின் சிறுநீரகம் மோசமாக உள்ளதாகவும், அது எப்போது வேண்டுமானாலும் செயலிழந்து போக வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Lalu Yadav
Lalu Yadav

By

Published : Dec 12, 2020, 6:58 PM IST

பிகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதாதள கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் சிறுநீரகம் மிக மோசமான நிலையில் இருப்பதாக அவரது மருத்துவர் உமேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவமனையில் லாலு பிரசாத் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், லாலுவின் உடல்நிலை குறித்த முக்கிய தகவலை அவருக்கு சிகிக்சை அளிக்கும் மருத்துவர் உமேஷ் பிரசாத் தற்போது கூறியுள்ளார்.

லாலுவின் சிறுநீரகம் மோசமாக உள்ளதாகவும், அது எப்போது வேண்டுமானாலும் செயலிழந்து போக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். லாலுவின் சிறுநீரகம் 25 விழுக்காடு மட்டுமே செயல்படுவதால், அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை கொடுக்கப்படுவதாக மருத்துவர் தெரிவித்தார்.

இது தொடர்பான விவரங்கள் உயர் அலுவர்களிடம் எழுத்துப்பூர்வமாக வழங்கப்படும் எனக் கூறினார். ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் லாலு, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாகவே மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.

இதையும் படிங்க:'விவசாயிகள் நலனை பாதுகாப்பதே மத்திய அரசின் நோக்கம்' - நரேந்திர சிங் தோமர்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details