தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லக்கிம்பூர் வன்முறை; ஒன்றிய அமைச்சர் மகனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்! - ஆஷிஷ் மிஸ்ரா

நாட்டை உலுக்கிய லக்கிம்பூர் வன்முறை வழக்கில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

Lakhimpur violence
Lakhimpur violence

By

Published : Oct 10, 2021, 12:37 PM IST

லக்கிம்பூர் கேரி: உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த 3ஆம் தேதி இரண்டு விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்டனர். அதன்பின்னர் நடந்த வன்முறை சம்பவங்களில் உயிரிழப்பு 8 ஆக உயர்ந்தது.

இந்த வழக்கில் உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா பெயரும் அடிபட்டது. இதையடுத்து அவர் தலைமறைவானார். இந்நிலையில் நேற்று (அக்.9) குற்றவியல் அலுவலகத்தில் ஆஷிஷ் மிஸ்ரா ஆஜரானார்.

ஒன்றிய அமைச்சர் மகனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்!

தொடர்ந்து அவரிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து ஆஷிஷ் மிஸ்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் நீதிபதி அவருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டார்.

லக்கிம்பூர் கேரி விவகாரத்தில் மாநில அரசு, நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்துள்ளது. லக்கிம்பூர் கேரியில் சம்பவத்தின்போது கார் டிரைவர் உள்பட இரண்டு பாஜக தொண்டர்களும் கொல்லப்பட்டனர்.

லக்கிம்பூர் வன்முறை

இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. முன்னதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

அப்போது குற்றஞ்சாட்டப்பட்டோரிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல் கெஞ்சுவது ஏன்? இதுவே வழக்கில் சாதாரண நபர் ஒருவரின் பெயர் அடிபட்டிருந்தால் இவ்வாறுதான் நடந்து கொள்வீர்களா? என சரமாரி கேள்வியெழுப்பியிருந்தார்.

உச்ச நீதிமன்றம்

மேலும் உத்தரப் பிரதேச அரசு எடுத்துள்ள நடவடிக்கையில் திருப்தி இல்லை, முழு அறிக்கையை மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : லக்கிம்பூர் கெரி கொடூரம் - பாஜக அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது!

ABOUT THE AUTHOR

...view details