டெல்லி: பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டி, பஞ்சாப் எல்லையில் இருந்து லக்கிம்பூர் நோக்கி இன்று (அக். 7) தனது ஆதரவாளார்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சித்து, "லக்கிம்பூர் வன்முறையில் குற்றவாளிகளைக் கைதுசெய்ய வேண்டும் அல்லது அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் விசாரணைக்கு நாளைக்குள் (அக். 8) ஆஜராக வேண்டும்.
இல்லையென்றால், நான் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.
நடைபயணம் முடக்கம்
அப்போது, சித்து தனது ஆதரவாளர்களுடன் யமுனா நகர் (ஹரியானா) - சஹரன்பூர் (உத்தரப்பிரதேசம்) எல்லையில் சென்றுகொண்டிருந்தபோது, காவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
இதன்பின்னர், அவரையும், அவரின் ஆதரவாளர்களையும் காவல் துறையினர் தடுப்புக்காவலில் எடுத்துள்ளனர்.
காவலர்கள் வண்டியில் ஏறும் சித்து முன்னதாக, இவ்வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், லக்கிம்பூர் விவகாரத்தில் யார் மீதெல்லாம் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கேள்வியெழுப்பியது.
இதையடுத்து, லக்கிம்பூர் வன்முறையில் தொடர்புடைய இரண்டு பேரை கைதுசெய்து காவலில் எடுத்து விசாரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: கேள்வி கேட்டார் வருண் காந்தி - கழற்றிவிட்டது பாஜக