ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பஸ்தாரின் லேடி சிங்கம் - ஐபிஎஸ் அங்கிதா சர்மாக்கு குவியும் பாராட்டு! - IPS Ankita Sharma naxal operation photos

நக்சலைட்கள் நிறைந்த பகுதியான பஸ்தாரின் பெண் ஐபிஎஸ் அங்கிதா சர்மா பணியமர்த்தப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. பாலிவுட் நடிகை ரவீனா டாண்டனும் அங்கிதா ஷர்மாவை பாராட்டி உண்மையான கதாநாயகி என கூறியுள்ளார்.

ஐபிஎஸ் அங்கிதா சர்மா
ஐபிஎஸ் அங்கிதா சர்மா
author img

By

Published : Dec 31, 2021, 7:54 AM IST

பஸ்தார்: நாடு முழுவதும் அங்கிதா ஷர்மா சக்திவாய்ந்த அலுவலராக அறியப்படுகிறார். அங்கிதா பஸ்தாரின் நக்சலைட் முன்னணி பகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இந்த பெண் ஐபிஎஸ், ஜவான்களுடன் சேர்ந்து நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார். துணிச்சலாக நக்சலைட்டு எல்லைக்குள் நுழைந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார் அங்கிதா சர்மா.

நக்சலைட் தேடுதல் வேட்டையின் போது, ​சக வீரர்கள் ​பெண் ஐபிஎஸ் அங்கிதாவுடன் இணைந்து புகைப்படமெடுத்துள்ளனர். தற்போது இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

in article image
சக வீரர்களுடன் ஐபிஎஸ் அங்கிதா சர்மா

அங்கிதா ஷர்மாவின் படத்தைப் பகிர்ந்துள்ள சமூக வலைதளப் பயனர் ஒருவர், "பஸ்தாரில் முதல்முறையாக நக்சல் நடவடிக்கையின் தலைமை பெண் ஐபிஎஸ் கையில் உள்ளது" என ட்வீட் செய்துள்ளார். இதனை ரீ ட்வீட் செய்த பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன், ட்ரூ ப்ளூ பிளடட் ஹீரோயின்கள் என எழுதியுள்ளார்.

அலுவலர் மட்டுமல்ல, ஆசிரியரும் கூட...

ஞாயிற்றுக்கிழமைகளில் பெண் ஐபிஎஸ் அங்கிதா சர்மா ஆசிரியராக செயல்படுகிறார். இவர் (UPSC) பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் 20-25 வயதுடைய இளைஞர்களுக்கு, அங்கிதா தனது அலுவலகத்தில் தேர்வு குறித்து கற்பிக்கிறார். அவர்களில் பெரும்பாலானோர் விலையுயர்ந்த பயிற்சிக் கட்டணத்தை செலுத்த முடியாதவர்கள்.

ஐபிஎஸ் அங்கிதா ஷர்மா சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். அரசுப் பள்ளியில் ஆரம்பப் படிப்பை முடித்தார். 2018ஆம் ஆண்டு தனது மூன்றாவது முயற்சியில் யூபிஎஸ்சி தேர்வில் 203வது ரேங்க் பெற்று வெற்றி பெற்றார்.

நக்சல் தேடுதல் வேட்டையில் ஐபிஎஸ் அங்கிதா சர்மா

அங்கிதா சர்மா சத்தீஸ்கரின் முதல் பெண் ஐபிஎஸ் ஆவார். இந்த நாட்களில் அவர் சத்தீஸ்கரின் நக்சல்களால் பாதிக்கப்பட்ட பஸ்தாரில் ஏஎஸ்பி பதவியில் நியமிக்கப்பட்டு நக்சல் நடவடிக்கைக்கு தலைமை தாங்குகிறார்.

இதையும் படிங்க:இந்து மத துறவி கைது: 'மாநிலங்களுக்கு இடையேயான நெறிமுறைகள் மீறல்'

ABOUT THE AUTHOR

...view details