தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்க லச்சித் வாழ்க்கை கற்றுக்கொடுக்கிறது - பிரதமர் மோடி - லச்சித் போர்புகான் பிறந்த நாள்

அஸ்ஸாம் மாநில சுதந்திரப் போராட்ட வீரர் லச்சித் போர்புகானின் 400ஆவது பிறந்த நாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

By

Published : Nov 25, 2022, 9:14 PM IST

டெல்லியில் அஸ்ஸாம் மாநில சுதந்திரப் போராட்ட வீரர் லச்சித் போர்புகானின் 400ஆவது பிறந்த நாள் விழா இன்று (நவம்பர் 25) நடந்தது. இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு ‘லச்சித் போர்புகான் - முகலாயர்களை தடுத்து நிறுத்திய அஸ்ஸாமின் நாயகன்’ என்ற நூலினை வெளியிட்டார். அதன்பின் உரையாற்றினார். அப்போது பிரதமர் கூறுகையில், லச்சித் போர்புகானின் வீரத்திற்கு அவரது 400ஆவது பிறந்த நாளில் நாம் அவருக்கு தலை வணங்குகிறோம். அஸ்ஸாமின் கலாச்சாரத்தை பாதுகாப்பதில் மிக முக்கியமான பங்களிப்பை செய்திருக்கிறார். இந்தியாவின் நிலைத்த கலாச்சாரம், நிலைத்த வீரம், நிலைத்த சகவாழ்வு என்ற மகத்தான பாரம்பரியத்திற்கு இந்த விழாவின் போது, நான் தலைவணங்குகிறேன். லச்சித் போர்புகானின் வாழ்க்கை நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க நமக்கு உத்வேகம் அளிக்கிறது.

அவரது வாழ்க்கை, வாரிசு மற்றும் உறவினர்களுக்கு பதிலாக நாட்டை உயர்வாக கருதவேண்டும் என்பதை கற்றுத்தருகிறது. வரலாற்றில் ஏராளமான நாகரீகங்கள் இருந்துள்ளன. இவற்றில் பல, அழிவற்றதாக இருந்தாலும் காலச்சுழற்சியில், அவை அடிபணிந்துள்ளன. எஞ்சியுள்ள நாகரீகங்களின் அடிப்படையில், வரலாற்றை உலகம் இன்று மதிப்பீடு செய்யும்போது இந்தியா பல எதிர்பாராத திருப்பங்களையும் கற்பனை செய்ய இயலாத வகையில், அந்நிய ஊடுருவல்களையும் ஆற்றலுடன் எதிர்கொண்டிருப்பது தெரிகிறது. இது நிகழ்வதற்கு காரணம் நெருக்கடியான நேரத்தில், ஆளுமைகள் அவற்றை சமாளித்து முன்னேறுகிறார்கள் என்ற உண்மை நிலைதான். அஸ்ஸாம் மாநிலமும் வடகிழக்கு மாநிலங்களும் ஒப்பற்ற வீரத்தைக் கொண்டிருந்தன. இந்த மண்ணின் மக்கள், துருக்கியர்கள், ஆஃப்கானியர்கள், முகலாயர்கள் ஆகியோரைக் கண்டிருக்கிறார்கள். பல தருணங்களில் அவர்களை விரட்டியிருக்கிறார்கள். முகலாயர்கள், குவஹாத்தியை கைப்பற்றியபோதும் லச்சித் போர்புகான் போன்றோரின் வீரத்தால் முகலாயர்கள் சக்ரவர்த்திகளின் பிடியிலிருந்து அது விடுதலைப் பெற்றது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:குஜராத் தேர்தல்.. மும்மூர்த்திகளால் பாஜகவுக்கே லாபம்.. ஈடிவி பாரத் தேர்தல் அலசல்..

ABOUT THE AUTHOR

...view details