தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் போட்டியின்றி தேர்வு

ஒன்றிய இணை அமைச்சராக உள்ள எல். முருகன் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் போட்டியின்றி தேர்வு
மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் போட்டியின்றி தேர்வு

By

Published : Sep 27, 2021, 5:33 PM IST

Updated : Sep 27, 2021, 6:49 PM IST

மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் காலியாகவுள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தேர்தலில் போட்டியிட பாஜக வேட்பாளர்களாக ஒன்றிய அமைச்சர்கள் எல். முருகன், சர்பானந்தா சோனோவால் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இதில் எல். முருகன் மத்தியப் பிரதேசத்திலும், சர்பானந்தா சோனோவால் அஸ்ஸாமிலும் களம் காண்பார்கள் என அறிவிக்கப்பட்டது.

மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் போட்டியின்றி தேர்வு

இதையடுத்து, தேர்தலில் போட்டியிடுவதற்காக மத்தியப் பிரதேசத்திலுள்ள போபாலில் தேர்தல் அலுவலரிடம் செப்.21 ஆம் தேதி ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்தநிலையில், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் உட்பட எந்த கட்சியும் போட்டியிடாத காரணத்தினால் மத்தியப் பிரதேசத்திலிருந்து எல்.முருகன் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி இன்று (செப்.27) தேர்வாகியுள்ளார். இதற்கான சான்றிதழை அம்மாநில தேர்தல் நடத்தும் அலுவலர் எல்.முருகனிடம் வழங்கினார்.

மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் போட்டியின்றி தேர்வு

அதேபோல ஒன்றிய அமைச்சராக உள்ள சர்பானந்தா சோனோவாலும் இன்று அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

சர்பானந்தா சோனோவால்

இவர்கள் இருவருக்கும் பாஜக மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகனுக்கு தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

அண்ணாமலை வாழ்த்து

இதையும் படிங்க: பாரத் பந்த்: பாஜகவின் கிழக்கிந்திய கம்பெனி மனநிலையை தோலுரித்துக் காட்டுகிறது!

Last Updated : Sep 27, 2021, 6:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details