தமிழ்நாடு

tamil nadu

அஞ்சல் துறை அசத்தல் முயற்சி... ட்ரோன் மூலம் தபால் விநியோகம்!

நாட்டில் முதல்முறையாக குஜராத்தில் ட்ரோன் மூலம் அஞ்சல் துறை பார்சல் டெலிவரி செய்து சோதனை முயற்சி மேற்கொண்டனர்.

By

Published : May 30, 2022, 11:06 PM IST

Published : May 30, 2022, 11:06 PM IST

ட்ரோன் மூலம் தபால் விநியோகம்
ட்ரோன் மூலம் தபால் விநியோகம்

குஜராத் (கட்ச்):நாட்டில் முதல்முறையாககுஜராத் மாநிலத்தின் ஹபே (Habay) கிராமத்தில் இருந்து நேர் கிராமத்திற்கு இந்திய அஞ்சல் துறை ட்ரோன் மூலம் பார்சல் டெலிவரி செய்து சோதனை முயற்சி மேற்கொண்டது. இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தது என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒன்றிய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்பேரில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. மேலும், 2 கிலோ எடையுள்ள ஒரு மருத்துவ பார்சலை ட்ரோனில் வைத்து அனுப்பியதில், சுமார் 47 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 25 நிமிடங்களில் கடந்து டெலிவரி செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் வரும் நாட்களில் ட்ரோன் மூலம் தபால், பார்சல் டெலிவரி செய்யும் பணியில் இந்திய அஞ்சல் துறை ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. ஒன்றிய அரசிடமிருந்து உரிய அனுமதி கிடைத்தபின் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற சகோதரர்கள் - இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details