தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உடுப்பி கல்லூரி வீடியோ விவகாரம்: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ நேரில் விசாரணை! - தேசிய மகளிர் ஆணையம்

உடுப்பி கல்லூரி வீடியோ விவகாரம் தொடர்பாக போலீஸாரிடம் சென்று விவரங்களைப் பெற உள்ளதாகவும், கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவர்களைச் சந்தித்து என்ன நடந்தது என்பதை அறிய அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ தெரிவித்து உள்ளார்.

உடுப்பி கல்லூரி வீடியோ விவகாரம் : களத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ!
உடுப்பி கல்லூரி வீடியோ விவகாரம் : களத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ!

By

Published : Jul 27, 2023, 9:39 AM IST

உடுப்பி: கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியின் மூன்று மாணவிகள், சக மாணவிகளை கழிவறையில் படம் பிடித்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் ஒரு சில நாட்களுக்குப் பிறகு, உடுப்பி காவல் துறை இந்த வழக்கு தொடர்பாக இரண்டு தனித்தனி முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்து உள்ளது.

இது தொடர்பாக கர்நாடக காவல்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தானாக முன் வந்து விசாரணைக்கு உட்படுத்தி உள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

ஒரு நபரின் அந்தரங்கத்தை படம் பிடித்ததாகவும், அந்த வீடியோவை நீக்கியதற்காகவும் மூன்று மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் நிர்வாகத்தின் மீது உடுப்பியில் உள்ள மல்பே காவல் நிலையத்தில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

எடிட் செய்யப்பட்ட அந்த வீடியோவை, யூடியூப் சேனல்களில் பதிவேற்றி, ஒருவர் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டது தொடர்பாக இரண்டாவது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் மற்றும் புண்படுத்தும் மற்றும் வகுப்புவாத வெறுப்பை பரப்புவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக போலீஸார் குற்றம் சாட்டி உள்ளனர்.

நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்றதாக மல்பே காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், இது குறித்த விசாரணை நடத்தப்படும் என்று போலீஸார் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் எதிர்கட்சியான பாஜக மற்றும் கர்நாடக அரசு இடையே பெரும் விவாதப் பொருளாக மாறி உள்ளது.

இந்த விவகாரத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த தகாத செயலில் ஈடுபட்ட மாணவிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

கர்நாடக அரசு இது பொய் செய்தி என்று தெரிவித்து உள்ள நிலையில், ஏன் அந்த மூன்று மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர், மன்னிப்பு கடிதம் ஏன்? இந்த விவகாரத்தில் காவல் துறை தோல்வி அடைந்து விட்டது. அவர்கள் மிகப்பெரிய அரசியல் அழுத்தத்தில் உள்ளனர். எந்தவித அரசியல் அழுத்தமும் இன்றி போலீசார் பணியாற்ற வேண்டும் என்று பொம்மை தெரிவித்து உள்ளார்.

மேலும், இது தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷாத் கூறுகையில், "இது தொடர்பாக ஏற்கனவே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க பாஜக விரும்பவில்லை. சமூகத்தின் மீது அவர்களுக்கு உண்மையிலேயே பொறுப்பு இருந்தால், மணிப்பூர் பிரச்னையில் போராட்டம் நடத்தட்டும்” என்றார்.

இதற்கிடையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக பிரமுகருமான குஷ்பூ, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உடுப்பி செல்ல உள்ளதாக ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளார். இதுபோன்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடுவதைப் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஒரு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக, நான் இந்த விஷயத்தைப் பார்த்து வருகிறேன். மாணவர்களுடன் பேச உள்ளேன். காவல் துறையினரைச் சந்திப்பேன் மற்றும் கல்லூரிக்குச் செல்வேன். பெண்களின் கண்ணியத்துடன் யாரும் விளையாட முடியாது” என குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: மனைவி ரூ.100 கொடுக்காததால் பெற்ற குழந்தையை கொன்ற தந்தை!

ABOUT THE AUTHOR

...view details