தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19 காரணமாக களையிழந்த ஹரித்வார் கும்பமேளா - இந்தியாவில் கும்பமேளா

இந்தியாவில் இரண்டாம் கட்ட கோவிட்-19 அலை காரணமாக, கும்பமேளாவிற்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

Kumbh Mela
Kumbh Mela

By

Published : Apr 2, 2021, 10:51 PM IST

உத்ரகாண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற ஹரித்வார் கும்பமேளா இந்தாண்டு தொடங்கியுள்ளது. நேற்று ஏப்.1 கும்பமேளா தொடங்கிய நிலையில் ஏப்ரல் 12,14 மற்றும் 27ஆம் தேதிகள் விழாவின் முக்கிய நாள்களாகக் கருதப்படுகின்றன.

கும்பமேளாவின் முதல் நாளில் வழக்கத்தைவிட குறைவான பக்தர்களே கலந்துகொண்டனர். இந்தியாவில் இரண்டாம் கட்ட கோவிட்-19 அலை தொடங்கியுள்ளதால், அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

கும்பமேளாவுக்கு வரும் நபர்கள் அனைவரும் ஆர்.டி.பி.சிஆர் பரிசோதனை எடுத்து அதன் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட விதிமுறைகள் முறையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, வழக்கத்தைவிட, ஹரித்வார் கும்பமேளாவிற்கு இந்தாண்டு குறைவான எண்ணிக்கையிலேயே பக்தர்கள் வருகை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டியுடன் சிறப்பு நேர்காணல்!

ABOUT THE AUTHOR

...view details