ஹரித்துவாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறுவது வழக்கம். இந்துக்களின் புனிதமான நாள்களில் ஹரித்துவார் கங்கை ஆற்றில் புனித நீராடினால் நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அந்த வகையில், இந்தாண்டு தொடங்கிய கும்பமேளாவில் பங்கேற்ற பக்தர்களில் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
30 சாதுக்களுக்கு இதுவரை கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலானோர் கரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும், சமூக விலகலைக் கடைப்பிடிக்காமலும் தொடர்ந்து இங்கு நீராடிவருகின்றனர்.