தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெண்கள் விடுதிக்குள் இளம்பெண் பாலியல் வன்புணர்வு... மைசூரில் கொடூரம்! - 23 வயதான இளம்பெண் பாலியல் வன்புணர்வு

மைசூரில் பெண்கள் விடுதிக்குள் 23 வயது இளம்பெண் பெண்கள் விடுதியில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட நிலையில், குற்றவாளியை காவல் துறையினர் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மைசூரில் பயங்கரம்
மைசூரில் பயங்கரம்

By

Published : Sep 4, 2021, 2:03 PM IST

கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில், 23 வயதான இளம்பெண், பாலியல் வன்புணர்வுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுதியில் தனியாக அப்பெண் இருப்பதை அறிந்துகொண்ட அந்நபர், விடுதிக்குள் புகுந்து பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். மேலும், அங்கிருந்து தப்பிப்பதற்கு முன்பு, கத்தியால் அப்பெண்ணைத் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் சக விடுதி பெண்கள் திரும்பிய பின்னர் தான் தெரிய வந்துள்ளது. அதனையடுத்து உடனடியாக இளம்பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், குற்றவாளியைக் கைது செய்தனர்.

மேலும், முதலில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, தன்னை வன்புணர்வு செய்த நபர் யார் என தெரியாது எனக் கூறியுள்ளார். ஆனால், காவல் துறை நடத்திய விசாரணையில் இருவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அப்பெண்ணிடம் காவல் துறையினர் விசாரிக்கையில், அந்நபரை தெரியும் என உண்மையை ஒப்புக்கொண்டதாகவும், இதுதொடர்பாக அடுத்தகட்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:போதையில் தகராறு: மனைவியைக் கத்தியால் குத்தியவர் கைது

ABOUT THE AUTHOR

...view details