தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகாவில் இளைஞரை கடித்த அரிய வகை விஷப் பூச்சி

கர்நாடகாவில் விவசாய நிலத்தில் அரிய வகை விஷப் பூச்சியால் கடிப்பட்ட இளைஞருக்கு தீவிர உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன.

விவசாய நிலத்தில் இளைஞரைக் கடித்த விஷப் பூச்சி ..!
விவசாய நிலத்தில் இளைஞரைக் கடித்த விஷப் பூச்சி ..!

By

Published : Oct 16, 2022, 8:52 AM IST

கர்நாடகா(கங்காவதி): விவசாய நிலத்தில் விஷப்பூச்சியால் கடிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஷங்கர் கவுடா எனும் இந்த இளைஞர் ஹனுமன் கவுடா எனும் விவசாயியின் நிலத்தில் அறுவடை வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது இவரை ஓர் விஷப் பூச்சி கடித்தது.

இதனால் பெரும் வலியில் துடித்த அந்த இளைஞரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து மூன்று நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு ஷங்கர் கவுடா குணமடைந்தார். பூச்சி கடித்ததால் ஷங்கரின் உடம்பெங்கும் கொப்பளங்கள் உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர், அந்தப் பகுதி விவசாய நிலங்களில் பெரும் வாரியாகக் காணப்படும் ’ஓக் ஸ்லக்’ எனும் ஓர் வகை விஷப் பூச்சியால் கடிக்கப்பட்டார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பூச்சியியல் நிபுணர் ராகவேந்திரா எலிகரா கூறுகையில், “இந்தப் பூச்சியின் அறிவியல் பெயர் டெல்பினி எயுக்லியா.

இதை மனிதர்கள் தொட்டால் அவர்கள் தோலில் எரிச்சல், அரிப்பு போன்றவைகள் ஏற்படும். இது அந்தப் பூச்சி தன்னை வேட்டையாடும் பறவைகளிலிருந்து பாதுகாக்க பயன்படுத்தும் சக்தியாகும். இதற்கு பெயர் ‘கேமஃபுலாக் டெக்னிக்’ எனச் சொல்லப்படும்.

இதனால் கடிக்கப்பட்டவர்கள் அலெர்ஜி போன்ற தோல் பாதிப்புகளால் பாதிக்கப்படுவர். அவர்கள் சரியான மருத்துவ சிகிச்சை பெற் அவேண்டியது அவசியம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரூ.500 திருப்பி தராத வங்கி... வாடிக்கையாளருக்கு ரூ.1.02 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு...

ABOUT THE AUTHOR

...view details