தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கேஎஸ்ஆர்டிசி' வார்த்தைக்கு அடம்பிடித்த 2 மாநிலங்கள்: முடிவு என்ன? - இரண்டு மாநில போக்குவரத்துக் கழகத்தின் சட்ட போராட்டம்

கேஎஸ்ஆர்டிசி பெயருக்காக இரண்டு மாநிலப் போக்குவரத்துக் கழகத்தின் சட்டப் போராட்டம், 7 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

KSRTC
'கேஎஸ்ஆர்டிசி'

By

Published : Jun 4, 2021, 9:55 AM IST

கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே ஒரு பெயருக்காகக் கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்த சட்டப் போராட்டம், தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஆம், கேஎஸ்ஆர்டிசி (KSRTC) யாருக்குச் சொந்தம் என்பதுதான் பிரச்சினை.

பெயர் மாற்றம் எப்போது?

1965ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி, திருவாங்கூர் மாநில போக்குவரத்துத் துறை என்ற பெயரை கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் என்று மாற்றப்பட்டுள்ளது. அதேபோல, 1973இல் மைசூரு அரசு சாலைப் போக்குவரத்துத் துறை என்பதை கர்நாடக போக்குவரத்து என்று பெயர் மாற்றப்பட்டது.

இரண்டு கழகங்களுக்கும் நீண்ட பாரம்பரியம் இருப்பதால், பெயர் யாருக்கு அளிப்பது என்பதில் குழப்பம் இருந்தது.

ஒரே சின்னமா?

பெயரளவில் குழப்பம் இருப்பதாலும், இரண்டு கழகத்தின் சின்னங்களில் வேறுபாடு உள்ளன. கேரள சின்னத்தில் இரண்டு யானை படமும், கர்நாடக கழகத்தின் சின்னத்தின் இருபுறமும் பறவை பார்ப்பது போன்ற சின்னமும் இடம்பெற்றுள்ளன.

'கேஎஸ்ஆர்டிசி' வார்த்தைக்கு அடம்பிடித்த 2 மாநிலங்கள்

பிரச்சினையை யார் ஆரம்பித்தது?

கர்நாடக போக்குவரத்துக்கழகம்தான் முதலில் 2014இல் கேஎஸ்ஆர்டிசி பெயருக்குச் சொந்தம் கொண்டாடியது. இது குறித்து, கேரள போக்குவரத்துத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின்னர் களத்திலிறங்கிய பெயரை விட்டுக்கொடுக்காமல் போட்டிப்போடத் தொடங்கியது.

கேரள போக்குவரத்துக் கழகம்

முடிவுக்கு வந்த போராட்டம்

சுமார் ஏழு ஆண்டுகளாக நடைபெற்றுவந்த வழக்கில், தற்போது தீர்ப்பு வந்துள்ளது. கேஎஸ்ஆர்டிசி பெயருக்குச் சொந்தக்காரர் கேரளாதான் என காப்புரிமை டிசைன் மற்றும் டிரேட்மார்க் கண்ட்ரோலர் ஜெனரல் தீர்ப்பு (Controller General of Patent Design and Trademark) வழங்கியுள்ளது. லோகோ மற்றும் பஸ் சேவையின் மிகவும் பிரபலமான புனைபெயர் 'அனாவண்டி'( Aanavandi) ஆகியவற்றைக் கேரளா மட்டுமே பயன்படுத்த முடியும்.

இது தொடர்பாக கர்நாடக போக்குவரத்துக் கழகத்திற்கு, நோட்டீஸ் அனுப்பப்படும் என கேரள மாநிலப் போக்குவரத்துச் செயலாளர் பிஜு பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். அதையும் மீறி, கேஎஸ்ஆர்டிசி பெயரை உபயோகித்தால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

கர்நாடகா 'கேஎஸ்ஆர்டிசி'

இருப்பினும் இது தொடர்பான, முறையான அறிவிப்பு எதுவும் வரவில்லை எனக் கர்நாடக போக்குவரத்துத் துறை சார்பில் சொல்லப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details