இந்து புராணக் கதாபாத்திரமான கிருஷ்ணனின் பிறந்தநாளை இந்துக்கள் கிருஷ்ணஜெயந்தியாக கொண்டாடுகின்றனர். இந்த நாள் கோகுலாஷ்டமி எனவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் மேற்கொள்வது, கிருஷ்ணனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது என சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையடுத்து இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் இன்று(ஆகஸ்ட் 19) கிருஷ்ணஜெயந்தியை கொண்டாடி வருகின்றனர். குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் கிருஷ்ணஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர்: குடியரசுத் தலைவஙர் திரெளபதி முர்மு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘ஜென்மாஷ்டமி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். கிருஷ்ணரின் வாழ்க்கையின் லீலை, மக்கள் நலனுக்காக தன்னலமற்ற செயல்களை செய்ய கற்றுக்கொடுக்கிறது. எண்ணம், சொல், செயலால் அனைவரின் நலனுக்கும் முன்னுரிமை அளிக்க இந்தப் புனிதப் பெருவிழா நம் அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என தெரிவித்தார்.