தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டி.கே. சிவக்குமார் மகளுக்கு இன்று நிச்சயதார்த்தம்! - நிச்சயதார்த்தம்

கர்நாடக காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான டி.கே. சிவக்குமாரின் மகளுக்கு இன்று நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.

Shivakumars daughter engagement Siddhartha DK Shivakumar அமர்த்தியா, ஐஸ்வர்யா திருமணம் டி.கே. சிவக்குமார் மகளுக்கு இன்று நிச்சயதார்த்தம் டி.கே. சிவக்குமார் ஐஸ்வர்யா அமர்த்தியா நிச்சயதார்த்தம் காபி டே
Shivakumars daughter engagement Siddhartha DK Shivakumar அமர்த்தியா, ஐஸ்வர்யா திருமணம் டி.கே. சிவக்குமார் மகளுக்கு இன்று நிச்சயதார்த்தம் டி.கே. சிவக்குமார் ஐஸ்வர்யா அமர்த்தியா நிச்சயதார்த்தம் காபி டே

By

Published : Nov 19, 2020, 7:10 AM IST

Updated : Nov 19, 2020, 1:48 PM IST

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மகளுக்கும், மறைந்த காபி டே நிறுவனர் சித்தார்த்தாவின் மகனுக்கும் வியாழக்கிழமை (நவ.19) நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.

கர்நாடக காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் மறைந்த காபி சக்ரவர்த்தி சித்தார்தாவின் மகன் அமர்த்யா ஹெக்டேவிற்கும் குடும்ப பெரியோர்கள் முன்னிலையில் முறைப்படி இன்று நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.

டி.கே. சிவக்குமார் மகளுக்கு இன்று நிச்சயதார்த்தம்!

அமர்த்தியா, கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம். கிருஷ்ணாவின் பேரன் ஆவார். அமர்த்தியாவுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் நிகழாண்டு தொடக்கத்தில் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டது.

ஐஸ்வர்யா, அமர்த்தியா ஜோடி

இதற்கிடையில் கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக திருமணம் தள்ளிப்போனது. அமர்த்தியா, ஐஸ்வர்யா திருமணம் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையும் படிங்க: கரோனா: கடைபிடிக்க வேண்டிய ஐந்து விதிமுறைகளை கூறும் மகேஷ் பாபுவின் மகள்

Last Updated : Nov 19, 2020, 1:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details