கேரள மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடிவு செய்தது. டிசம்பர் மாதம் 3 கட்டங்களாக இத்தேர்தல் நடத்தப்படும் என அம்மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே தேதியை அறிவித்துள்ளது.
இதற்காக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட கட்சிகள் முதல் கட்ட பரப்புரையை நிறைவு செய்துள்ளன. மேற்கொண்டு பரப்புரையில் ஈடுபடுவதற்கான நிதி சிக்கலில் கேரள காங்கிரஸ் கமிட்டி திண்டாடி வருகிறது. இந்த நெருக்கடி நிலையைச் சமாளிக்க 100 ரூபாய், 1000 ரூபாய் கூப்பன்களை வார்டு கமிட்டிகளில் ஒப்படைத்து நிதி திரட்ட அறிவுறுத்தியுள்ளது. மாநகராட்சி அளவிலான வார்டு கமிட்டிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கூப்பன்கள் வழங்கப்படும்.
இந்தக் கூப்பன்களின் மூலம் காங்கிரஸ் ஆதரவாளர்கள், உள்ளூர் மக்கள் என நிதியுதவி செய்ய விருப்பமுள்ளவர்களிடம் சேகரிக்கவேண்டும். நிதியைத் திரட்டுவதும், பயனுள்ள வகையில் வேட்பாளர்களுக்கு நிதியைக் கொடுப்பதும் ஒவ்வொரு வார்டு கமிட்டியின் பொறுப்பு.