தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Air Asia: கிளம்பிய சிறிது நேரத்தில் ஏர் ஏசியா விமானம் தரையிறக்கம்.. காரணம் என்ன? - கிளம்பிய உடன் ஏர் ஏசியா விமானம் தரையிறக்கம்

லக்னோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கிளம்பிய சிறிது நேரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஏர் ஏசியா
ஏர் ஏசியா

By

Published : Jan 29, 2023, 7:09 PM IST

லக்னோ:உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ விமான நிலையத்தில் இருந்து மேற்கு வங்கம் கொல்கத்தாவிற்கு ஏர் ஏசியாவின் ஏர்பஸ் விமானம் புறப்பட்டது. காலை 11 மணிக்கு ஏர் இந்தியாவின் i5-319 விமானம் டேக் ஆஃப் செய்யப்பட்ட நிலையில் வாகனத்தை அடையும் போது, விமானத்தின் மீது பறவை மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் லக்னோ விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில், விமானத்தில் அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. விமானத்தில் ஏறத்தாழ 180 பயணிகள் பயணிக்க தயாராக இருந்ததாகவும், பறவை மோதியதால் உடனடியாக அவசர தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஏர் ஏசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகளின் சிரமத்திற்கு வருந்துவதாகவும் ஏர் ஏசியா விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஹூரியத் மாநாடு அமைப்பின் அலுவலகம் முடக்கம் - என்ஐஏ நடவடிக்கை!

ABOUT THE AUTHOR

...view details