தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கொடைக்கானலில் 2 ஆண்டுகளுக்குப்பிறகு மலர்களுக்காக கார்னேஷன் செடியின் நடவுப்பணிகள் தொடக்கம்! - காதலுக்கு அடையாளமாக உள்ள ரோஜா மலர்களை பின்னுக்கு தள்ளி

கொடைக்கானலில் கார்னேஷன் செடியின் நடவுப்பணிகள் தொடங்கியுள்ளன.

கொடைக்கானலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கார்னேஷன் மலர்கள் நடவு பணி துவக்கம்
கொடைக்கானலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கார்னேஷன் மலர்கள் நடவு பணி துவக்கம்

By

Published : Jun 30, 2022, 3:00 PM IST

திண்டுக்கல்: 'காதலுக்கு' அடையாளமாக உள்ள ரோஜா மலர்களை பின்னுக்குத் தள்ளி கடந்த சில ஆண்டுகளாகவே கார்னேசன் மலர்களின் விற்பனை அதிகரித்து இருந்தது. குறிப்பாக காதலர் தினம் மற்றும் முக்கிய நிகழ்வுகளுக்கு கார்னேஷன் மலர்களைப் பல தரப்பினரும் உபயோகித்து வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா ஊரடங்கு காரணமாக கார்னேஷன் மலர்கள் செடியிலேயே வாடிப்போயின.

மேலும் கார்னேசன் மலர்களை பசுமை குடில் அமைத்து தான், சாகுபடி செய்ய முடியும். இதற்காக கார்னேஷன் செடியை நடவுசெய்து, மலர்களை சாகுபடி செய்வதற்கு பல்வேறு இடர்பாடுகளும் இருக்கும் இந்த நிலையில் பசுமை குடில் அமைத்து கார்னேஷன் செடிகளை நடவு செய்தவர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் கொடைக்கானலில் பசுமை குடில் அமைத்து கார்னேஷன் செடிகளை நடவு செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள்.

கார்னேஷன் மலர்கள் நடவு பணி

நெதர்லாந்து நாட்டிலிருந்து செடிகள் வரவழைக்கப்பட்டு, நடவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நடவுப்பணி முடிந்த பிறகு இரண்டு ஆண்டுகள் ஒரு செடியிலிருந்து ஒரு தவணையில் 6 பூக்கள் பூக்கும் எனவும்; தற்போது நடவு செய்தால் நான்கு மாதங்களுக்குப் பிறகு, மலர்களை சாகுபடி செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சாகுபடியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொடைக்கானலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கார்னேஷன் செடியின் நடவுப் பணிகள் தொடக்கம்...

இதையும் படிங்க:பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து வீடு அமைத்து அசத்திய வனத்துறை!

ABOUT THE AUTHOR

...view details