டெல்லி: மகாத்மா காந்தியின் 152ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கதர் துணியால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி லடாக்கின் லே பகுதியில் வைக்கப்பட்டது.
225 அடி உயரமும், 150 அடி அகலமும் கொண்ட இந்த கொடியின் எடை ஏறத்தாழ 1400 கிலோ எனக் கணக்கிடப்பட்டுள்ளது. காதி கிராம் தொழில் வாரியத்தால் தயாரிக்கப்பட்ட இந்த கொடி 70 காதி நெசவாளர்களால் 49 நாள்களில் உருவாக்கப்பட்டது.
காதி கிராம் தொழில் வாரியம் இந்த தேசியக் கொடியை இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்த நிலையில், ராணுவம் லே நகரத்தின் மலை உச்சியில் தேசிய கொடியை காட்சிப்படுத்தியது.
மிகப்பெரிய தேசிய கொடிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சட்டக்கத்தில் பொருத்தி, அது மண்ணில் படாதவாறு காட்சிப்படுத்தினர். இந்த தேசிய கொடி 9 பாகமாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பாகமும் ஏறத்தாழ 100 கிலோ எடையில் இருக்கும். லடாக்கின் துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ண மாத்தூர் இக்கொடி வைக்கும் நிகழ்வுக்கு முன்னிலை வகித்தார்.
இதையும் படிங்க: காந்தி ஜெயந்தி- மணற்சிற்பம் உருவாக்கி அசத்திய சுதர்சன் பட்நாயக்