ஜம்மு- காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் அமைந்துள்ள மார்வாவில் ஒரு பெண் சுவாசிப்பதில் சிக்கலை சந்தித்துள்ளார். வெகுநேரமாக மூச்சுத்திணறலால் சிரமப்பட்ட அந்தப் பெண்ணுக்கு உதவ அப்பகுதியினர் ராணுவத்தை அழைத்துள்ளனர்.
மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பெண்: ஆக்ஸிஜன் அளித்து உதவிய இந்திய ராணுவம்! - மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட பெண்
ஸ்ரீநகர்: மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பெண்ணுக்கு, இந்திய ராணுவம் ஆக்ஸிஜன் வழங்கி உதவியுள்ளது.
Indian army
விரைந்து வந்த ராணுவத்தினர் அந்தப் பெண்ணுக்கு ஆக்ஸிஜன் வழங்கி, அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளனர். உரிய நேரத்தில் உதவி செய்த ராஷ்டிரிய ரைபிள்ஸ் பட்டாலியனுக்கு நன்றி கூறிய அப்பகுதியினர், தங்களைப் போல தொலைதூரத்தில் இருக்கும் மக்களுக்கு ராணும் எப்போதும் உதவுவதாகக் கூறினர்.
ஜம்மு-காஷ்மீரின் தொலைதூர கிராமங்களில் போதுமான சுகாதார வசதிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.