தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற்றால் போராடுவோம் - கிசான் சேனா எச்சரிக்கை! - வேளாண் சட்டம்

டெல்லி: விவசாயிகளுக்கு பயனளிக்கும் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கூடாது என்று மத்திய அரசிடம் கிசான் சேனா விவசாய அமைப்பு கோரிக்கைவைத்துள்ளது. மேலும், இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற்றால் பெரியளவில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

நரேந்திர சிங் தோமர்
நரேந்திர சிங் தோமர்

By

Published : Dec 25, 2020, 12:11 PM IST

உத்தரப் பிரதேசத்தின் 15 மாவட்டங்களைச் சேர்ந்த கிசான் சேனாவின் பிரதிநிதிகள், மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரைச் சந்தித்து புதிய வேளாண் சட்டங்களுக்கு தங்களது ஆதரவை வழங்கினர்.

மூன்று வேளாண் சீர்த்திருத்தச் சட்டங்களை எந்த நிபந்தனையிலும் ரத்துசெய்ய வேண்டாம் என்று மத்திய அரசிடம் கிசான் சேனாவின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லையில் கடந்த 30 நாள்களாக விவசாயிகளின் போராட்டம் நடந்துவருகிறது.

மறுபுறம், சட்டங்களை ஆதரிக்கும் பல விவசாய அமைப்புகளும் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் மத்திய வேளாண்மை அமைச்சரைச் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துவருகின்றன.

ABOUT THE AUTHOR

...view details