ஹைதராபாத் : இந்தியா ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளாக ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டது. அந்த ஆட்சி கொடூரங்கள் அடக்குமுறைகளால் நிறைந்திருந்தது. ஆங்கிலேயருக்கு எதிராக நடந்த 1857ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சிக்கு பின்னர் நாடு முழுக்க ஆங்காங்கே கிளர்ச்சிகள் நடைபெற்றன.
இந்தச் சண்டைகளில் அத்தாரா-கத் பழங்குடியினர் முக்கிய பங்கு வகித்தனர். இவர்களுக்கு பின்னால் கதாநாயகர்களாக பிரித்விராஜ் சவுகானின் சந்ததியினர்களான சம்பல்பூரின் ராஜா சுரேந்திர சாய் மற்றும் சோனகானின் ஜமீன்தார் வீர் நாராயண் சிங் ஆகியோர் இருந்தனர்.
அத்தாராகத் சமஸ்தானம்
அந்தப் பகுதியில் வனத்தில் விளையும் பொருள்கள் அதிகமாக கிடைக்கும். பதினெட்டாம் நூற்றாண்டின் அத்தாராகத் என்பது இன்றைய கிழக்கு சத்தீஸ்கர் மற்றும் மேற்கு ஒடிசாவை உள்ளடக்கிய பகுதி.
அது வானை முட்டும் மலைகள், அடர்ந்த காடுகள், நீர்வீழ்ச்சிகள் நிறைந்த செழிப்பான பூமி. இதற்கிடையில், ஆங்கிலேயர்களை எதிர்த்து 1757 மற்றும் 1818இல் வங்காளத்தில் மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்றன.
நாடு பிடித்த ஆங்கிலேயர்கள்
அந்தப் போராட்டங்களால் ஆங்கிலேயரின் நாடு பிடிக்கும் முனைப்பை முறியடிக்க முடியவில்லை. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் ஆங்கிலேயர்கள் அத்தாராகத் தவிர நாட்டின் மற்ற பகுதிகளை கைப்பற்றியிருந்தனர்.
ஆங்கிலேயர்கள் அந்தாராகத்தை கைப்பற்ற கடுமையாக முயற்சித்தனர். இதற்கிடையில், சம்பல்பூர் சிம்மாசனத்தில் சுரேந்திர சாய்க்கு பதிலாக, மறைந்த ராஜ மகாராஜ் சாயின் மனைவி ராணி மோகன் குமாரி அமரவைக்கப்பட்டார்.
தீரமிக்க நாராயண் சிங்
இதற்கு அப்பகுதி மன்னர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து சுரேந்திர சாய், அவரது சகோதரர் உதந்த் சிங் மாமா பல்ராம் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஹசாரிபாக் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சுரேந்திர சாய் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் கிளர்ச்சி தொடர்ந்தது. சோனகானின் பின்ஜ்வார் ஜமீன்தார், நாராயண் சிங், கிடங்கின் பூட்டுகளை உடைத்து, உணவு தானியங்களை கிராம மக்களுக்கு விநியோகித்தார்.
ஆங்கிலேயர்கள் ராஜ தந்திரம்
இதற்கிடையில், ஜூலை 30, 1857ஆம் தேதியன்று, இந்திய வீரர்கள் ஹசாரிபாக் சிறையின் கதவை உடைத்து, சுரேந்திர சாய் மற்றும் அவரது தோழர்களை தப்பிக்க உதவினர். அவர்கள் தப்பித்த பிறகு, சாரங்கார் ராஜா சங்ராம் சிங்கின் அரண்மனையில் தங்கினர்.
சுரேந்திர சாயை கைப்பற்றத் திணறிய ஆங்கிலேயர்கள், ராஜதந்திரத்தை கையில் எடுத்தனர். செப்டம்பர் 1861இல், சம்பல்பூர் மற்றும் கட்டாக் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த கிளர்ச்சியாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.
20 ஆண்டு சிறை
நவம்பர் 22, 1862இல், சுரேந்திர சாய் சரணடைந்ததாக கவர்னர் ஜெனரல் எல்ஜின், லண்டனில் உள்ள பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை செயலாளருக்கு அறிவித்தார். இதற்குப் பிறகு, அத்தாராகத் மன்னர்கள் மற்றும் ஜமீன்தார்கள் ஆங்கிலேயரின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக காத்திருக்கத் தொடங்கினர்.
இருப்பினும், ஆங்கிலேயர்கள் நிர்வாகக் கட்டமைப்பை மாற்றி, வாக்குறுதிகளைத் தவிர்த்தனர். அதைத் தொடர்ந்து சுரேந்திர சாய் மீண்டும் ஒரு ஆயுத கிளர்ச்சிக்கு திட்டமிட்டார். இது ஆங்கிலேயர்களுக்கு தெரியவந்தது. சுரேந்திர சாய் கைது செய்யப்பட்டு மத்திய பிரதேசத்தின் காண்ட்வா அருகே உள்ள ஆசீர்கர் கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் 17 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து பின்னர் இறந்தார்.
மரண தண்டனை
சுரேந்திர சாயைப் போலவே, ஆங்கிலேயர்களும் சோனகானின் நில உரிமையாளரான நாராயண் சிங் சரணடையும் பொருட்டு கிராம மக்களைத் துன்புறுத்தத் தொடங்கினர்.
கிராமத்தை தீக்கிரையாக்கினார்கள். தனது அன்புக்குரியவர்கள் மீதான கொடுமைகளை கண்டு, மனம் தாங்காத வீர நாராயண் சிங் சரணடைந்தார். அவர் 1857 டிசம்பர் 5ஆம் தேதி ராய்ப்பூரில் துணை ஆணையர் எலியட்டிடம் ஒப்படைக்கப்பட்ட அவருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
நாட்டின் விடுதலைப் போரில் ஜமீன்தார்களும், மன்னர்களும் வரலாற்று கதாநாயகர்கள்
வரலாற்றின் பக்கங்களில் எங்காவது காணாமல் போன இந்த ஹீரோக்களை பற்றி தற்போதைய தலைமுறை மிக குறைவாகவே அறிந்துள்ளது. வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ள இதுபோன்ற எண்ணற்ற நாயகர்களினால் தான் நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம்.!
இதையும் படிங்க : இந்திய விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனை ஜாலியன் வாலாபாக்!