காரைக்கால்: வடகிழக்கு பருவமழையால் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்தது.
இந்நிலையில் மழை நின்று நான்கு நாள்களை கடந்தும் கிரீன்கார்டனில் வீடுகளை சுற்றியுள்ள மழை வெள்ளம் வடியாமல் உள்ளது. இதன் காரணமாக குடியிருப்பு வாசிகள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
குழந்தைகள் படகு மூலம் சவாரி வடியாத மழை வெள்ளம்
மழை வெள்ளம் வடியவைப்பதற்கான நடவடிக்கையை காரைக்கால் நகராட்சி நிர்வாகம் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
குழந்தைகள் படகு மூலம் சவாரி
இதனிடையே மழை வெள்ளம் குளம் போல் காட்சியளிப்பதால், குழந்தைகள் படகு தயார் செய்து (Ride by boat) அதில் விளையாடி வருகின்றனர்.
இதையும் படிங்க:3 நிமிடத்தில் 19 இட்லி சாப்பிட்டவருக்கு ரூ.5 ஆயிரம் பரிசு