திருவனந்தபுரம்:கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று (ஜூன் 20) சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் நோயாளி ஒருவர் உயிரிழந்தார். இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் 4 மணி நேரம் தாமதமாக்கியதாலேயே உயிரிழப்பு ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் தாமதம்... கேரள நோயாளி உயிரிழப்பு... - சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் உயிரிழப்பு
கேரளாவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 4 மணி நேரம் தாமதமானதால் நோயாளி உயிரிழந்தார். இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அறிந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ், இந்த சம்பவம் குறித்து விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கூடுதல் தலைமைச் செயலருக்கு (சுகாதாரம்) உத்தரவிட்டார். இதனிடையே மாநில மனித உரிமைகள் ஆணையம், இந்த சம்பவம் குறித்து 4 வாரங்களுக்குள் விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவக் கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் மருத்துவமனையின் சிறுநீரகம் மற்றும் சிறுநீரகவியல் துறை மருத்துவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" - பிரதமர்