ஹைதராபாத்: தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்ற நடிகையான குஷ்பு அரசியலில் திமுக, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து தற்போது பாஜகவில் பயணம் செய்து வருகிறார். அண்மையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்ட அவர் தேசிய அளவில் தனது பணியை தீவிரமாக செய்து வந்தார்.
இந்நிலையில், ஏப்ரல் 7(இன்று) தனது ட்விட்டர் பக்கத்தில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து குஷ்புவின் பதவில் கூறப்பட்டுள்ளதாவது, "கடுமையான காய்ச்சல் மற்றூம் உடல் வலியால் அவதியடைந்தேன். அதனால் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். உடல் உங்களிடம் ஏதாவது சொன்னால் அதனை தயவு செய்து நிராகரிக்காதீர்கள். நான் விரைவில் குணமாகி வருவேன். செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.