பஞ்சாப்:வாரீஸ் டி பஞ்சாப் அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங்கை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர். தனி நாடு கொள்கையை முன்னிறுத்தி போராட்டம் நடத்தி வரும் காலிஸ்தான் அமைப்புகளில் ஒன்று வாரீ டி பஞ்சாப். அந்த அமைப்பின் தலைவராக அம்ரித் பால் சிங் என்பவர் செயல்பட்டு வந்தார்.
பஞ்சாப் நடிகர் தீப் சித்துவால் தொடங்கப்பட்ட வாரீஸ் டி பஞ்சாப் அமைப்பு கடந்த 2022 ஆம் ஆண்டு அவரது மறைவுக்கு பின் அம்ரித் பால் சிங்கின் வசமானது. குறுகிய காலத்தில் வாரீஸ் டி பஞ்சாப் அமைப்பின் தலைவராக அம்ரீத் பால் சிங் உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் அம்ரித் பால் சிங்கை பஞ்சாப் போலீசார் தேடி வந்தனர். அம்ரித் பால் சிங்கின் ஆதரவாளர்கள் பலர் பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
லண்டன் தப்பிச் செல்ல இருந்த அம்ரித் பால் சிங்கின் மனைவியை அமிர்தசரஸ் விமான நிலையத்தில் வைத்து பஞ்சாப் போலீசார் மடக்கிப் பிடித்தனர். இந்நிலையில் அம்ரித் பால் சிங்கை கைது செய்ததாக பஞ்சாப் போலீசார் தெரிவித்து உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பஞ்சாப்பில் இருந்து தப்பித்துச் சென்ற அம்ரித் பால் சிங் நேபாளத்தில் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது.