சிம்லா: இமாச்சலப் பிரதேசம் தபோவனில் உள்ள சட்டப்பேரவை கட்டடத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் காலிஸ்தான் கொடியை வைத்து சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் சனிக்கிழமை (மே7) இரவு நடைபெற்றிருக்கலாம். இது பற்றி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை அறிந்ததும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இது குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சட்டப்பேரவை வாசலில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. ஆகையால் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வுக்கு உட்படுத்திவருகின்றனர்.
முன்னதாக மார்ச் மாதம் சீக்கியத் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னு, முதலமைச்சர் ஜெய்ராம் தாகூருக்கு மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில் இமாச்சலப் பிரதேசத்தில் காலிஸ்தான் கொடியை ஏற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.