அகமதாபாத்:குஜராத் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். அந்த வகையில் நேற்று (ஆகஸ்ட் 27) அகமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றின் முகப்பில் நடைபெற்ற காதி விழாவில் பங்கேற்றார். இந்த காதி விழாவில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 7,500 பெண் காதி கைவினை கலைஞர்கள் பங்கேற்றனர். அப்போது 7,500 பெண்களும் ஒன்றாக ராட்டையை சுற்றி புதிய சாதனை படைத்தனர்.
அவர்களுடன் பிரதமர் மோடியும் ராட்டை சுற்றினார். 1920ஆம் ஆண்டுக்குப்பின் பல்வேறு தலைமுறைகளில் பயன்படுத்தப்பட்ட 22 ராட்டைகளின் கண்காட்சியும் நடைபெற்றது. நாடு முழுவதும் காதியை பிரபலப்படுத்தவும், காதி தயாரிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இளைஞர்களிடையே காதியின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் இந்த விழா நடத்தப்பட்டது.