பிகார்:பிகார் மாநிலத்தில் செல்லும் வைஷாலி அதிவிரைவு ரயில், லகோ மற்றும் தனௌலி புல்வாரியா நிலையத்தின் ரயில்வே பாதை வழியாக இன்று (நவ-11) வழக்கம்போல் சென்று கொண்டிருந்தது. அப்பாதையில் 155ஆவது தண்டவாளக் கம்பம் அருகே சுமார் 10 அங்குல தண்டவாளம் பழுதடைந்து இருந்தது.
இதனை அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த ரயில் கீமேன் கண்டுபிடித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக சிவப்புக்கொடி ஏற்றி ரயிலை தடுத்து நிறுத்தியுள்ளார். இதன்காரணமாக நடக்கவிருந்த பெரும் விபத்து தடுக்கப்பட்டது.