தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளாவில் மதவழிபாட்டு நிகழ்ச்சியில் வெடி விபத்து - இரண்டு பேர் பலி! என்ஐஏ சோதனை என தகவல்! - Minister of Home Affairs of India

Kerala convention centre blast: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமசேரி பகுதியிலுள்ள ஜம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் இன்று (அக்.29) காலை நடைபெற்ற மதவழிபாட்டு பொது நிகழ்ச்சியில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Explosion in convention of Jehovah's Witnesses; One killed and several injured
கேரளா மதவழிப்பாட்டு நிகழ்ச்சியில் வெடி விபத்து - என்.ஐ.ஏ சோதனை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 12:43 PM IST

Updated : Oct 29, 2023, 11:07 PM IST

எர்ணாகுளம் (கேரளா): கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமசேரி பகுதியிலுள்ள ஜம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் இன்று (அக்.29) காலை நடைபெற்ற மதவழிபாட்டு பொது நிகழ்ச்சியில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர், மேலும் 36க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த நபர் தற்போது வரை அடையாளம் காணப்படவில்லை. இந்த வெடி விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடைபெற்ற இந்த வெடி விபத்திற்கான காரணம் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை.

இந்த மதவழிபாட்டு பொது நிகழ்ச்சியில் 2,300க்கும் அதிகமான நபர் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று நாட்களுக்கு முன்பு தொடங்கிய இந்த நிகழ்ச்சி, இன்று (அக்.29) மாலை நிறைவடைய உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிவிபத்து சம்பவம் குறித்து கேரள மாநில முதல்வர் பிரனாயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், தீவிரவாத தாக்குதலா என்பது குறித்து விசாரணைக்குப் பின்பு தெரிய வரும் என தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வெடி விபத்து சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரளா மாநில முதல்வர் பிரனாயி விஜயன் இடம் கேட்டு அறிந்துள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு என்.எஸ்.ஐி (NSG) மற்றும் என்.ஐ.ஏ (NIA) சென்று விசாரணையை உடனடியாக தொடங்கும் எனத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வெடிவிபத்து நடைபெற்ற இடம் சீலிடப்பட்டு தற்போது என்.ஐ.ஏ விசாரணை மேற்கொள்வதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மாலத்தீவு புதிய அதிபரால் இந்திய மீனவர்களுக்கு சிக்கலா? பவளத்தீவில் நடப்பது என்ன?

Last Updated : Oct 29, 2023, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details