கண்ணூர்:கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் முகம்மது ஹிஷாம், ஆப்பிரிக்க மலைப்பாம்புகளை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். கிங் கோன், கார்பெட் மலைப்பாம்பு, கிரீன் ட்ரீ மலைப்பாம்பு, கென்யா சாண்ட் போவா உள்ளிட்ட பல்வேறு வகையான மலைப்பாம்புகளை வளர்க்கிறார். அவற்றிற்கு உணவளிப்பதற்காக எலிகளையும் வளர்க்கிறார். வெளிநாட்டுப் பறவைகள், ஆஸ்திரேலிய கிளைடர்கள் உள்ளிட்டவையும் அவரது செல்லப்பிராணிகள் லிஸ்ட்டில் உள்ளன.
ஆப்பிரிக்க மலைப்பாம்புகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் கல்லூரி மாணவர்! - கிரீன் ட்ரீ மலைப்பாம்பு
கண்ணூரில் கல்லூரி மாணவர் ஒருவர் ஆப்பிரிக்க மலைப்பாம்புகளை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். பாம்புகளை விற்பனையும் செய்து வருவாய் ஈட்டுகிறார்.
பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல், பாம்புகளை விற்பனையும் செய்து வருவாய் ஈட்டுவதாக ஹிஷாம் தெரிவித்தார். அவர் கூறுகையில், "மலைப்பாம்புகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை, அவற்றை வளர்ப்பது எளிது. அவை விஷமற்றவை. நான் அவற்றை டெல்லியில் இருந்து கொண்டு வருகிறேன். சிலவற்றை எனக்கு வைத்துக் கொண்டு, சிலவற்றை விற்பனை செய்கிறேன். இது எனக்கு ஒரு பொழுதுபோக்காகவும், வருமானமாகவும் இருக்கிறது. 25,000 ரூபாய் முதல் நான்கு லட்சம் ரூபாய் வரை பாம்புகளை விற்பனை செய்கிறேன். Parivesh என்ற செயலி மூலமாக மட்டுமே இந்த பாம்புகளை விற்பனை செய்கிறேன்" என்று கூறினார்.
இதையும் படிங்க: Viral Video - சிவனுக்கு விரலைக் காணிக்கை செலுத்திய இளைஞர்