தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளாவை வாட்டும் டெங்கு, எலி காய்ச்சல்; 42,475 பேர் பாதிப்பு!

கேரளா மாநிலத்தில் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்ட 42,475 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 40 பேர் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 5, 2023, 9:04 PM IST

கேரளா:கேரளாவின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், அம்மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. கடந்த நான்கு நாட்களில் 309 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஏற்கனவே, டெங்கு காய்ச்சலால் 1067 பேர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என அஞ்சப்படும் நிலையில் அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, 5 பேர் இந்த டெங்கு பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, நேற்று 312 பேர் வரை இதற்கான பரிசோதனை மேற்கொண்ட நிலையில், 167 பேர் இந்த டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

மேலும், திருவனந்தபுரத்தில் 32 பேரும், கொல்லத்தில் 51 பேரும், பத்தனம்திட்டாவில் 6 பேரும், இடுக்கியில் 9 பேரும், கோட்டயத்தில் 5 பேரும், ஆழப்புழாவில் 17 பேரும், எர்ணாகுளத்தில் 72 பேரும், திருச்சூரில் 36 பேரும், பாலக்காட்டில் 9 பேரும், மலப்புரத்தில் 19 பேரும், கோழிக்கோட்டில் 3 பேரும், காசர்கோட்டில் 4 பேரும், கண்ணூரில் 14 பேரும் இந்த டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, எர்ணாகுளம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. கடந்த நான்கு நாட்களில் இம்மாவட்டத்தில் 101 பேர் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்தடுத்து தொடரும் தொற்று காய்ச்சல்:மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் தொற்று காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 11,293 பேர் தொற்று காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், ஜூலை 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரையில் 42,475 பேர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் கேரளா மாநிலத்தின் பல பகுதிகளில் 10,000-க்கும் மேற்பட்ட காய்ச்சல் வழக்குகள் பதிவாகின.

4 இறப்புகள்:இதனிடையே, திருவனந்தபுரம் 870, கொல்லம் 560, பத்தனம்திட்டா 249, இடுக்கி 315, கோட்டயம் 520, ஆலப்புழா 561, எர்ணாகுளம் 851, திருச்சூர் 606, பாலக்காடு 957, மலப்புரம் 2,254, கோழிக்கோடு 11763, கண்ணூர் 760, வயநாடு 1 என மாவட்ட வாரியாக இக்காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டன. இவை தவிர மொத்தமாக, மாநிலம் முழுவதும் 2,93,424 பேர் பாதிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளவர்கள் என கணக்கிடும் பட்சத்தில் இந்த எண்ணிக்க அதிகமாக வாய்ப்புள்ளது. இவைகளுக்கு நடுவே எலிக்காய்ச்சலும் மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களில் மாநிலத்தின் பல பகுதிகளில் 40 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வெறிநாய் கடியால் 4 இறப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இதையும் படிங்க: கேரளாவில் காய்ச்சல் கொடூரம்... 39 பேர் பலி.. 15 ஆயிரம் பேர் பாதிப்பு!

சுகாதாரத்துறை அறிவுறுத்தல்: மாநிலத்தில் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவமழையின் நடுவே, தொற்று காய்ச்சலும் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. பருவமழை குறைந்த பின்பு நோய்த்தொற்று ஏற்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த திறக்கப்பட்ட நிவாரணம் முகாம்களில் நியமிக்கப்பட்ட மருத்துவம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் நோய் பாதிப்புகள் குறித்த தகவல்களை அந்தந்த மாவட்ட மருத்துவ அலுவலரிடம் முறையாகத் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத்துறை உயர் அலுவலர்கள் தினசரி இப்பணிகள் நடைபெறுவதை மாவட்ட மருத்துவ அலுவலர்கள் உறுதி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கு போதிய சிகிச்சை மற்றும் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து மருத்துவமனைகளும் விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏதேனும் மாறுபட்ட நோய் பாதிப்புகள் இருக்குமாயின் உடனடியாக தகவல் தெரிவிக்கவும், முகாம்களின் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்கவும், கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை முறையாக அழிக்கவும் சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியவும்: குடிநீரை கொதிக்க வைத்து குடிப்பதோடு உணவு மற்றும் குடிநீரை மூடி வைக்கவும், மழைநீர் தொட்டிகளை குளோரினேட் முறையில் சுத்தமாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நோய் தொற்றால் எடுத்துக்கொள்ளும் மாத்திரை விபரங்களைப் பாதுகாப்பாக வைக்கவும், முகாம்களில் அனைத்து மருந்துகளும் கிடைப்பதை உறுதி செய்யவும், ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டோர், குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட அனைவரும் சிறப்பு முகாம்களில் முகக்கவசம் அணியவும், புற்றுநோயாளிகள், டயாலிசிஸ் நோயாளிகள் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை பெறுபவர்கள் உள்ளிட்டோர் மீது சிறப்பு கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெறிநாய் கடி பாதிப்பிலிருந்து பாதுகாப்பாக இருக்கவும், ரேபிஸ் வைரஸ் தடுப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. சேறுகள், அழுக்கான தேங்கிய மழைநீர் உள்ளிட்டவைகளில் செல்பவர்களுக்கு டாக்ஸிசைக்ளின், ரேபிஸ் எதிர்ப்பு மாத்திரைகள் எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Chhattisgarh: போலி பாராமெடிக்கல் கல்லூரிகள் வசூல் வேட்டை! 12 ஆயிரம் மாணவர்களின் வாழ்க்கை?

ABOUT THE AUTHOR

...view details