தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளா: வெங்கரா தொகுதியில் முதல்முறையாக திருநங்கை வேட்பாளர் போட்டி - First transgender candidate from Kerala hopes of victory in polls

மலப்புரம்: வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில், கேரள மாநிலத்தின் வெங்கரா தொகுதியில் முதல்முறையாக திருநங்கை வேட்பாளர் போட்டியிடுகிறார்.

கேரளா வெங்கரா தொகுதியில் -  முதல் திருநங்கை வேட்பாளர் போட்டி
கேரளா வெங்கரா தொகுதியில் - முதல் திருநங்கை வேட்பாளர் போட்டி

By

Published : Mar 21, 2021, 4:36 PM IST

Updated : Mar 21, 2021, 5:23 PM IST

கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்தவர், அனன்யா குமாரி அலெக்ஸ். இவர் ஒரு திருநங்கை. இவர் 2021 ஏப்ரல் மாதம் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெங்கரா தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். தற்போது, அனன்யா ஜனநாயக சமூக நீதிக் கட்சியின் வேட்பாளராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, இந்திய முஸ்லீம் லீக் (ஐ.யூ.எம்.எல்) வேட்பாளர் பி.கே.குன்ஹாலிக்குட்டி, இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) வேட்பாளர் பி.ஜிஜி ஆகியோருக்கு எதிராக அனன்யா போட்டியிடுகிறார்.

இதுகுறித்து அனன்யா கூறுகையில்,''இது வெற்றி அல்லது இழப்பைப் பற்றியது அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

அதில், முதல் வேட்பாளராகப் போட்டியிடுவது குறித்து நான் மிகவும் பெருமிதமடைகிறேன். இந்தத் தேர்தலில் வரலாறு படைப்பதாகவும் நம்புகிறேன். எனது நோக்கம், முயற்சிகள் அனைத்தும் போராடி வெற்றி பெறுவதே. நான் வென்றால் இந்தச் சமூகத்தின் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்திற்காகப் பணியாற்ற விரும்புகிறேன். பின்னர், மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வேன்'' என்று பேசினார்.

இதையும் படிங்க: சிசிஏவை கைவிடும் வாய்ப்பு இல்லை - சி.டி. ரவி பதில்

Last Updated : Mar 21, 2021, 5:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details