திருச்சூர்:தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்த குழந்தையிடம் 2012ஆம் ஆண்டு பள்ளி சுற்றுப்பயணம் சென்றபோது பாலியல் அத்துமீறலில் அப்பள்ளி ஆசிரியர் ஈடுபட்டார். அக்குழந்தை இதை தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து, இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பான வழக்கு இன்று திருச்சூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஆசிரியருக்கு 29 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.