கேரளா:கேரளாவில் திருவனந்தபுரம் - நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பாம்பு ஒன்று சுற்றித் திரிந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். S5 பெட்டியில் பாம்பைக் கண்ட பயணிகள் பீதி அடைந்து, ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பாம்பை கண்டுபிடிக்க வனத்துறையினரை ரயில்வே துறையினர் அனுப்பி வைத்தனர்.
கோழிக்கோடு ரயில் நிலையத்தை ரயில் அடைந்ததும், பாம்பு இருந்த ரயில் பெட்டியிலிருந்து அனைவரையும் இறக்கி விட்டு வனத்துறையினர் சோதனை நடத்தினர். ஆனால், பாம்பு கிடைக்கவில்லை. பாம்பு ரயில் பெட்டியில் இருந்த துளை வழியாக வெளியே சென்றிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.