தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 26, 2021, 8:33 AM IST

ETV Bharat / bharat

போலியாக போக்சோ வழக்குப் பதிவு: கேரள எஸ்ஐ மீது துறை ரீதியான விசாரணை

கண்ணூரில் பேக்கரி உரிமையாளர் மீது தன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலியாக வழக்குப் பதிவு செய்த எஸ்ஐ மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

போலியாக போக்சோ வழக்குப் பதிவு
போலியாக போக்சோ வழக்குப் பதிவு

கண்ணூர்:பையனூர் பகுதியில் பேக்கரி நடத்தி வருபவர் ஷமீம். கடந்த ஆகஸ்டு 19ஆம் தேதியன்று, சம்பந்தப்பட்ட எஸ்ஐ ஷமீமின் பேக்கரிக்கு வந்துள்ளார். அங்கு தனது நான்கு சக்கர வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக ஷமீமிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் எஸ்ஐ.

இதனைத் தொடர்ந்து, அடுத்த நாள் ஷமீமின் பேக்கரிக்கு சீருடை அணிந்த காவலர் ஒருவர் வந்து, கரோனா நோய்ப்பரவல் விதிமுறைகளை பின்பற்றாமல் பேக்கரி நடத்துவதாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்போவதாக மிரட்டியுள்ளார்.

போலியாக போக்சோ வழக்குப் பதிவு

பின்னர், பேக்கரிக்கு கேக் வாங்கச் சென்ற தன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஷமீம் மீது எஸ்ஐ போலியாக குற்றஞ்சாட்டி வழக்குப் பதிவு செய்தார். இந்நிலையில், தன் மீது விரோதம் காரணமாக எஸ்ஐ போலியாக வழக்குப் பதிவு செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட எஸ்ஐ மீது எஸ்பியிடமும், முதலமைச்சரிடமும் ஷமீம் புகாரளித்தார்.

இதனை அறிந்த எஸ்ஐ, ஷமீமின் சகோதரருக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு கண்ணூர் ஊரக எஸ்பி நவ்நீத் சர்மா காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

விசாரணையில் எஸ்ஐ போலியாக போக்சோ சட்டத்தின்கீழ் ஷமீம் மீது வழக்குப் பதிவு செய்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட எஸ்ஐ துறை ரீதியான நடவடிக்கையாக வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதையும் படிங்க:Karimangalam accident case: குடிபோதையில் நண்பனை வாகனத்தின் மீது தள்ளிவிட்டு விபத்து என நாடகம்: இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details