தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளாவில் ஒரே நாளில் 5,804 பேருக்கு கரோனா உறுதி! - Corona cases in Kerala

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக நேற்று (நவ.13) 5 ஆயிரத்து 804 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் ஒரே நாளில் 5,804 பேருக்கு கரோனா உறுதி
கேரளாவில் ஒரே நாளில் 5,804 பேருக்கு கரோனா உறுதி

By

Published : Nov 14, 2020, 6:45 AM IST

கேரள மாநிலத்தில் கரோனா தொற்று குறைந்துவந்த நிலையில் நேற்று (நவ.13) புதிதாக 5 ஆயிரத்து 804 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தின் மொத்த கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 77 ஆயிரத்து 390ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நேற்று ஒரே நாளில் 26 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 822ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நேற்று மட்டும் 6 ஆயிரத்து 201 பேர் கரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

இதனால், மாநிலத்தில் 4 லட்சத்து 34 ஆயிரத்து 730 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: மருத்துவமனை குளியலறையில் இறந்து கிடந்த நோயாளி : மக்களை பதற்றத்தில் ஆழ்த்தும் வைரல் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details