தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளாவில் மழைப்பொழிவு 60 % வீழ்ச்சி - lowest in the last 5 years

கேரளா மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளைக் காட்டிலும் தற்போது மழைபொழிவின் விகிதம் 60 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் மழைப்பொழிவு 60 சதவீதம் வீழ்ச்சி
கேரளாவில் மழைப்பொழிவு 60 சதவீதம் வீழ்ச்சி

By

Published : Jun 17, 2022, 9:07 AM IST

கோழிக்கூடு(கேரளா):கடந்த ஐந்து ஆண்டுகளில் இருந்த பருவமழையின் விகிதம் தற்போது குறைந்துள்ளது. கடந்த ஜூன் 15 வரை கேரளாவில் மிகக் குறைந்த அளவில் மழை பதிவாகியுள்ளது. கேரளாவில் ஜூன் 15 வரை 109.7 மில்லிமீட்டர் மழை மட்டுமே பதிவாகியுள்ளது. முன்னதாக 2018 இல் 343.7 மிமீ, 2019 இல் 175.4 மிமீ, 2020 இல் 230 மிமீ, மற்றும் 2021ல் 161.1 மி.மீ. என பதிவாகியிருந்தது இந்த ஆண்டு குறைந்துள்ளது.

பருவமழை குறைந்தால் தென்மேற்கு பருவமழையை நம்பி இருக்கும் மாநிலங்களில் கடுமையான மழை பற்றாக்குறை ஏற்படும். தென்மேற்கு திசையில் காற்று இல்லாததே பருவமழை குறைவதற்கு முக்கிய காரணம் என்று கொச்சி பல்கலைக்கழகத்தின் வானிலை விஞ்ஞானி டாக்டர் அபிலாஷ் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு திசையில் மணிக்கு 40 கிமீ வேகத்தில் காற்று வீச வேண்டும். வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக காற்றின் வேகம் கூடுகிறது. ஆனால் இந்த முறை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைகள் இல்லை. வங்காள விரிகுடாவில் அதனால் காற்று இல்லை" என்று அபிலாஷ் கூறினார்.

இதே நிலைமை நிலவினால் ஜூன் மாதத்தில் மிகக் குறைவான மழை பெய்யும், இது விவசாயிகளை மோசமாக பாதிக்கும். அரபி கடலில் இருந்து இந்தியாவின் தென்மேற்குப் பகுதிக்கு பருவமழைக்கான மேகங்களை காற்று கொண்டு செல்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவமழை தொடங்கியுள்ள போதிலும், மழையின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. பருவமழை தீவிரமடைவதால் நிலைமை மாறலாம் என்றும், வரும் மாதங்களில் தற்போதைய பற்றாக்குறையை குறைக்கலாம் என்றும் வானிலை ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:4 நாட்களுக்கு 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - மீனவர்களுக்கு எச்சரிக்கை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details