Niti Ayog Health Index: நிதி ஆயோக் வெளியிட்ட சிறந்த சுகாதாரத்துறைக்கான தரவரிசைப் பட்டியலை ஒன்றிய அரசு இன்று (டிசம்பர் 27) வெளியிட்டது.
அதில் நாட்டிலேயே சுகாதாரத்துறையில் கேரள மாநிலம் முதலிடத்தையும், தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும், தெலங்கானா மூன்றாவது இடத்தையும் பிடித்து சாதனைபடைத்துள்ளது.
கரோனா தீவிரமடைந்தபோது, சிறப்பாகச் செயல்பட்டு, கடும் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொண்ட சுகாதாரத்துறைக்கான பட்டியலில் இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடம் இடம் பிடித்துள்ளது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்பட்டியலில், சிறப்பாக செயல்பட்ட மாநில சுகாதாரத்துறைகளுக்கென முன்னணி இடங்களும், மோசமாக செயல்பட்ட மாநிலங்களுக்கு கடைசி இடங்களும் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Dengue Fever: டெங்குவால் பள்ளி மாணவர் உயிரிழப்பு - மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரம்!