கேரளாவில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, வரப்போகும் தேர்தலில் பாஜக 115 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 25 இடங்களிலும் போட்டியிடும் என சுரேந்திரன் கூறியுள்ளார்.
வேட்பாளர் பட்டியில் குறித்த அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறிய அவர், முதலமைச்சர் வேட்பாளராக மெட்ரோ மேன் ஸ்ரீதரனை அறிவிக்க கட்சி மேலிடத்தில் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.