சைபர் குற்றங்கள், வரதட்சணை தொடர்பான குற்றங்கள் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களிலிருந்து அவர்களை பாதுகாக்கும் நோக்கில், கேரளாவில் ’பிங்க் பாதுகாப்பு’ எனும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை இன்று தொடங்கி வைத்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், 10 கார்கள், புல்லட் வாகனங்கள் உள்பட 40 இருசக்கர வாகனங்கள், 20 மிதிவண்டிகள் ஆகியவற்றை பிங்க் பாதுகாப்பு குழுவினருக்கு கேரள காவல் துறையினர் முன்பு வழங்கினார்.
வீடுவீடாகச் சென்று கண்காணிப்பு
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக வீடு வீடாகச் சென்று குடும்ப வன்முறைகள் குறித்து பெண் காவலர்கள் தகவல்களை சேகரிப்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பஞ்சாயத்து உறுப்பினர்கள், பக்கத்து வீட்டினர், உள்ளூர்வாசிகளிடமிருந்து தகவல்களை சேகரித்து மேற்படி நடவடிக்கைகளுக்காக காவல் துறையில் ஒப்படைக்கப்படும். பிங்க் காவலர்கள் ரோந்து பணியை செயல்படுத்துவது உள்பட 10 பகுதிகள் இத்திட்டத்தில் உள்ளன.