நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மக்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுரை வழங்கியுள்ளன.
இந்நிலையில் கேரளாவில் உள்ள காவல் துறையினர் தற்போது ட்ரெண்டாகியுள்ள ’எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் மூலம் மக்களுக்கு நடனம் மூலம் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.