தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பொருளாதார நெருக்கடி: மகளை ஆற்றில் வீசி கொலைசெய்த தந்தை - மகளை ஆற்றில் வீசி கொலை செய்த தந்தை

எர்ணாகுளத்தில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நபர் தனது மகளை ஆற்றில் வீசி கொலைசெய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Kerala: Police arrest man for tossing 13-year-old daughter into river
Kerala: Police arrest man for tossing 13-year-old daughter into river

By

Published : Apr 19, 2021, 6:43 PM IST

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் சானு மோகன். இவருக்கு 13 வயதில் வைகா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்தக் குழந்தையைக் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சிறுமியின் சடலம் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி முத்தர் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டது. இதையடுத்து, சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல் துறையினருக்கு பல அதிர்ச்சிகர தகவல்கள் கிடைத்தன.

விசாரணையில், பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்துவந்த சானு மோகன், தனது குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரால் தற்கொலை செய்துகொள்ள முடியாமல் போனதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, மோகனை கைதுசெய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details