கேரளா: கேரள காவல்துறை டிஜிபி அனில் காந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பாதுகாப்புக்காக முறையாக உரிமம் பெற்று துப்பாக்கியை வைத்துக்கொள்ள விரும்பும் பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்க காவல் துறை முடிவு செய்துள்ளது. துப்பாக்கி பயன்படுத்த உரிமம் வைத்திருப்பவர்கள் மற்றும் உரிமம் பெற விண்ணப்பித்திருப்பவர்கள் இந்த பயிற்சியில் சேரலாம்.
முதல் முறையாக துப்பாக்கியை கையாள்பவர்கள் ஐந்தாயிரம் ரூபாயும், ஏற்கெனவே சிறிதளவு பயிற்சி பெற்றவர்கள் ஆயிரம் ரூபாயும் செலுத்தி முழுமையான துப்பாக்கிப் பயிற்சியை பெறலாம். முழுமையான உடல் மற்றும் மன ஆரோக்கியம் கொண்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்தப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்" என்று தெரிவித்திருந்தார்.