தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒட்டுக்கேட்கப்பட்ட பார்க்கப்பட்ட விவகாரம்...விசாரணை கோரும் கேரளா! - phone-tapping seeks probe

பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் புயலை கிளப்பியுள்ளது.

கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன்
கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன்

By

Published : Jul 19, 2021, 11:24 PM IST

பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட சம்பவம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் சரமாரி கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்திய குடிமக்களின் மொபைல் போன்களில் இருந்து தகவல்கள் கசிந்ததற்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் தொடர்பு இருக்கிறது என கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஒட்டுக்கேட்கப்பட்டவர்களின் பட்டியலை பார்க்கும்போது அரசின் நோக்கம் தெரிய வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.

மேலும், பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு மர்மமாகவே உள்ளது. இவ்விவகாரம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என முஸ்லிம் லீக் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முகமது பஷீர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பெகாசஸ் விவகாரத்தில் அரசை குற்றஞ்சாட்டுவதில் அர்த்தமில்லை - ரவிசங்கர் பிரசாத்

ABOUT THE AUTHOR

...view details